தூத்துக்குடி மாவட்டத்தில்அண்ணாமலை 4 நாட்கள் பாதயாத்திரை: வெள்ளிக்கிழமை தொடங்குகிறார்

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாமலை 4 நாட்கள் பாதயாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்குகிறார்

Update: 2023-08-10 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாமலை 4 நாட்கள் பாதயாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்குகிறார்.

பாதயாத்திரை

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து மெயின்ரோடு, பூங்கா கிழக்கு சாலை, சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் சாலை, எட்டயபுரம் சாலை, புதுரோடு, மெயின்ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் முன்பு நிறைவடைகிறது.

நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். மாலை 4 மணிக்கு ஓட்டப்பிடாரம் தேரடி விலக்கில் இருந்து தொடங்கி, புதியம்புத்தூரில் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட தலைவர் சென்னகேசவன் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர் செய்து வருகின்றனர்.

தெற்கு மாவட்டம்

இதேபோல் 13, 14-ந் தேதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்வதாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதயாத்திரை தொடங்குகிறது. குரூஸ்பர்னாந்து சிலை, சத்திரம் பஸ் நிறுத்தம், வி.ஜி.எஸ். பள்ளி, சிவன் கோவில் ரதவீதி, வி.இ.ரோடு, சந்தை ரோடு, கான்வென்ட் ரோடு, சண்முகபுரம் வழியாக சுமங்கலி திருமண மண்டபம் அருகே உள்ள கன்னிவிநாயகர் கோவில் சந்திப்பு வரை நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஆழ்வார்திருநகரி சித்திரை வீதி, ஆதிநாதபுரம், நவலட்சுமிபுரம், சமத்துவபுரம், புதுக்குடி, ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு வரை பாதயாத்திரை நடக்கிறது.

14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு வீரபாண்டியன்பட்டினத்தில் பாதயாத்திரை தொடங்குகிறது. திருச்செந்தூர் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, இரும்பு ஆர்ச், முதல் சந்தி தெரு, சிவன்கோவில் வாசல், ரதவீதி, கிருஷ்ணன் கோவில் வழியாக தெப்பக்குளம் சந்திப்பு முன்பு நிறைவடைகிறது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்