தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக, எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-12 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி நடந்த அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலிலும், 17-ந் தேதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உடன்குடி அண்ணா திடலில் வைத்தும், 19-ந் தேதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் ஏரலிலும் நடக்கிறது.

இந்த பொதுக்கூட்டங்களில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்