திருச்செந்தூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

திருச்செந்தூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-12-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் நடந்த விழாவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா, மின்சார சிக்கன வார விழா, தாலுகா அலுவலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

பின்னர், திருச்செந்தூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின்சார சிக்கன வார விழா பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி பகத்சிங் பஸ் நிலையம், காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேலரத வீதி வழியாக சென்று மீண்டும் காமராஜர் சாலை வழியாக வந்து மின்வாரிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மின் வாரிய அலுவலர்கள், திருச்செந்தூர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் மின் சிக்கனம் தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

தாலுகா அலுவலகம் திறப்பு

மேலும், திருச்செந்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.3 கோடியே 82 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது.

இதை முதல்-அமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து அமைச்சர் புதிதாக கட்டப்பட்ட திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, மாற்று திறனாளிக்கான உதவி தொகை என பல்வேறு நலத்திட்ட உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தாசில்தார் சுவாமிநாதன், கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் வேலவன், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசிநூகு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் கோட்ட மின் செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி நிர்வாக அலுவலர் கலைக் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயக்குமார், முத்துகிருஷ்ணன், ரவீந்திர குமார், ராம் மோகன், ஜெய்கிங், திமுக மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்