திருச்செந்தூரில்நாய்கள் கண்காட்சி, சிறப்பு பரிசோதனை முகாம்
திருச்செந்தூரில் நாய்கள் கண்காட்சி, சிறப்பு பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
திருச்செந்தூர்:
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து அனைத்து வகை நாய்களுக்கான கண்காட்சி மற்றும் நாட்டு நாய்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாமை திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகிறது. அன்று காலை 9 மணி முதல் நாட்டு நாய்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து மதியம் 3 மணி முதல் அனைத்து இன நாய்களுக்கான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் நாய்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் பொதுமக்கள், செல்லப்பிராணிகளை வளர்போர் கலந்து கொள்ளலாம். கண்காட்சியில் நாய்களை பங்கேற்க செய்வதற்கு 9443586460, 9842266536 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது deanvcritni@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த தகவலை நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.