திருச்செந்தூரில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா
திருச்செந்தூரில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகுதியில் ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தாசில்தார் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்தவர்களின் சமூக சேவையை பாராட்டி சமூக சேவகர்கள் திருச்செந்தூரை சேர்ந்த மோகன், மணிகண்டன் ஆகியோருக்கு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கினார். திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நிகழ்ச்சியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்துராஜ், கல்யாணசுந்தரம், வருவாய் ஆய்வாளர்கள் சித்தர்பாபு, சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல் நன்றி கூறினார்.