திருச்செந்தூர் கோவிலில் உள்பிரகாரத்தில் தங்கி விரதமிருக்க பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை

திருச்செந்தூர் கோவிலில் உள்பிரகாரத்தில் தங்கி விரதமிருக்க பக்தர்களை அனுமதிக்க அமைச்சரிடம் இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-10-21 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். இதில் பாரம்பரிய முறைப்படி கோவில் உள்பிரகாரத்தில் தங்கி சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுடைய வேண்டுதல்களுக்கு முருகன் அருள்பாலித்துள்ளார். முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் அடைந்துள்ளனர். இந்து அறநிலையத்துறை அமைச்சர் இறை பக்தியில் மிகவும் நம்பிக்கை உடையவர். எனவே, ் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் தங்க அனுமதியளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்