திருச்செந்தூர் நகராட்சி பகுதியில்ரூ.80 லட்சத்தில் புதிய குழாய்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் ரூ.80 லட்சத்தில் புதிய குழாய்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தற்போது ஆவுடையார் குளத்திற்கு செல்கிறது. இந்த கழிவு நீர் ஆவுடையார் குளத்திற்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி, நகராட்சிக்கு பாத்தியப்பட்ட ஆலந்தலை வளமீட்பு பூங்காவிற்கு செல்ல நகராட்சி சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக குழாய்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நகராட்சி ஆணையாளர் வேலவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செங்குழி ரமேஷ் முன்னிலை வகித்தார். தலைவர் சிவஆனந்தி கலந்து கொண்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.