திருச்செந்தூர் பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: இந்து மக்கள் கட்சி முடிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

Update: 2023-08-14 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கண்ணன், மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ், அனுமன் சேனா மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், உடன்குடி அனுமன் சேனா ஒன்றிய தலைவர் பாலாஜி, இந்து மக்கள் கட்சி உடன்குடி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அமைப்பாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் ஒன்றியத்தில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, திருச்செந்தூர் கடற்கரையில் விஜர்சனம் செய்ய வேண்டும். திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்