திங்களூரில், 12 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அப்பிச்சிமார் மடம் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு

Update: 2022-07-28 20:11 GMT

பெருந்துறையை அடுத்த திங்களூர் அருகே அப்பிச்சிமார் மடம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மசிரியம்மாள், ராக்கியண்ணன், மாரய்யன் ஆகிய சாமிகள் உள்ளன. தொன்று தொட்டு இந்த கோவிலில் வழிபாட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இதனால் கடந்த 12 ஆண்டு்களுக்கு முன்பு கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பில், அந்த கோவிலின் நிர்வாகத்தை அப்பிச்சிமார் மடத்தின் மூத்த உறுப்பினர் தர்மராஜ் தலைமையில் மீண்டும் தொடங்கலாம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் இந்த கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன. அதைத்தொடர்ந்து நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்த கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.

மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக, திங்களூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்