தூத்துக்குடி தெர்மல்நகரில்மழைவளம் வேண்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம்

தூத்துக்குடி தெர்மல்நகரில் மழைவளம் வேண்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

Update: 2023-08-06 18:45 GMT

தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் குரு பூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜை நடந்தது. ஓம் சக்தி கொடியை உதவி செயற்பொறியாளர் பிரசாத் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மழைவளம், விவசாயம், தொழில்வளம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், அனல்மின் உற்பத்தி பெருகவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. இதனை என்.டி.பி.எல் அனல்மின்நிலைய தலைமை மேலாளர் சக்திராஜா தொடங்கி வைத்தார். உலக சமாதானம் வேண்டி கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம், மழைவளம் வேண்டி 504 பெண்கள், ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன், இளைஞர் அணி தலைவர் செல்லத்துரை, செயற்பொறியாளர் ஜெகதீசன், ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் கண்ணன், பிரசார செயலாளர் முத்தையா, வேள்விக்குழு கிருஷ்ண நீலா, தணிக்கை வேலு, சக்திபீட நிர்வாகிகள் இசக்கியப்பன், சரவணன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்