தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் 'பார்சல் பேக்கிங்' வசதி அறிமுகம்
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ‘பார்சல் பேக்கிங்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் 'பார்சல் பேக்கிங்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பார்சல் பேக்கிங் வசதி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தற்போது 'பார்சல் பேக்கிங்' வசதி அறிமுகப்படுத்தபட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ வசிக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால் தாங்கள் அனுப்ப வேண்டிய பொருட்களை மட்டும் தபால் அலுவலகங்களுக்கு கொண்டு வந்தால் போதுமானது. தபால் அலுவலகங்களிலேயே உங்கள் பொருட்களை பேக்கிங் செய்து தாங்கள் சொல்லும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடி கோட்டத்தில் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம், திருச்செந்தூர் தலைமை தபால் அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் அலுவலகம், தூத்துக்குடி நியூகாலனி துணை தபால் அலுவலகம் மற்றும் போல்நாயக்கன் பேட்டை துணை தபால் அலுவலகம் ஆகியவற்றில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல தபால் அலுலங்களிலும் இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இனிமேல் பொதுமக்கள் தபால் அலுவலகங்களுக்கு பார்சல்களை மட்டும் ெகாண்டு வந்தால் போதும். அவற்றை முறையாக பேக்கிங் செய்து உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.