தூத்துக்குடி மாநகராட்சியில்மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்

Update: 2023-08-15 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். இணை ஆணையாளர் ராஜாராம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்கள், தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பசுமையை உருவாக்கும் வகையில் மரம் நடுதல் செய்தவர்கள், மாநகராட்சி வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்புடன் உதவியவர்கள் என மொத்தம் 100 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தூய்மை பணியளார்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமச்சந்திரன், நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, ராஜசேகர். ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட பொறியாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்