திருக்கோவிலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு
திருக்கோவிலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் ஒன்றியம் வேங்கூர், ஆவியூர், வீரட்டகரம் ஆகிய ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சுற்று சுவர் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனர் டாக்டர் ஆர்.மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அங்கிருந்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏகாம்பரம், நாராயணசாமி, ஒன்றிய பொறியாளர்கள் சுப்பிரமணி, பழனிவேல், மேற்பார்வையாளர் ரங்கராஜன், குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானசேகரன், அன்புமதி குணசேகர், யமுனா உள்பட பலர் உடன் இருந்தனர்.