திருக்குவளையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா

திருக்குவளையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

Update: 2022-10-17 18:45 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் திருக்குவளையில் ரேஷன்கடை உள்ளது. இந்த கடையில் கீழத்தெருவை சேர்ந்த 511 குடும்ப அட்டைதாரர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் கீழத்தெரு பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று கீழத்தெருவில் திருவாய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் திருவாய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சதீஷ், செயலாளர் செல்வராஜ், திருக்குவளை பள்ளி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் மலர்வண்ணன், திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி, ஒன்றியக் குழு உறுப்பினர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்