தேனி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தேனி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-08-25 14:50 GMT

தேனி மாவட்டத்தில் இல்லம்தேடி கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல், கற்பித்தல் குறித்து தன்னார்வலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை கையாளும் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை கையாளும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் வழிகாட்டுதல்படி, மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற 120 தொடக்க நிலை கருத்தாளர்கள், 120 உயர் தொடக்க நிலை கருத்தாளர்களை கொண்டு 58 குறுவள மையங்கள் அளவில் இந்த பயிற்சி நடந்தது. பயிற்சியின் போது அனைத்து தன்னார்வலர்களுக்கும் 4-ம் கட்ட கையேடு, சுவரொட்டி மற்றும் அட்டைகள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்