தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள்: நாளை மறுநாள் தொடங்குகிறது

தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.

Update: 2022-11-11 18:45 GMT



சிறப்பு முகாம்கள்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்களிலும், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அமைக்கப்பட்ட ஆதார் பதிவு மையங்களிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இந்த முகாம் தொடங்குகிறது.

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. அதுபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் வாரத்தின் 7 நாட்களிலும் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடக்கிறது.

கட்டாய விரல் ரேகை பதிவு

இந்த சிறப்பு ஆதார் முகாமை பயன்படுத்தி ஆதார் சேவைகளான ஆதார் புதிய பதிவு, 6 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்கள் புதுப்பித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளலாம்.

தற்போது அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு, அனைவரும் ஆதார் புதுப்பித்து வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலமாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் சரியான ஆவணங்களை தற்போது சமர்ப்பித்து பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்