தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் சாவு

தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் இறந்தார்.

Update: 2023-08-04 18:42 GMT

தேன்கனிக்கோட்டை

தண்ணீர் தொட்டி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசட்டி காலனியை சேர்ந்தவர் பீரப்பா. இவருடைய மனைவி சாக்கம்மா (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை கோட்டை உளிமங்கலம் பகுதியில் உள்ள நவீன்குமார் என்பவரது தோட்டத்தில் பூ பறிக்கும் வேலைக்கு சென்றார்.

பின்னர் அவர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் கை, கால்களை கழுவி கொண்டு இருந்தார். அப்போது சாக்கம்மா திடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சாக்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்