உடைப்பிறப்பு கிராமத்தில் பொக்லைன் ஓட்டுனர் மீது தாக்குதல்

உடைப்பிறப்பு கிராமத்தில் பொக்லைன் ஓட்டுனர் மீது தாக்கிய மூன்று பேரை போலசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-11-17 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவவர் ஜார்ஜ் (வயது 45). பொக்கலைன் ஓட்டுனர். இவர் அங்குள்ள குருசடியில் இருந்த பெயர் பலகையை அகற்றியதில், அதே ஊரைச் சேர்ந்த அமுதன், தாமஸ், பீட்டர் ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜார்ஜ் உடைப்பிறப்பு கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அமுதன், தாமஸ், பீட்டர் ஆகியோர் 3 பேரும் அவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைநத ஜார்ஜ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து அமுதன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்