உடன்குடி வட்டார பகுதியில் பனைமர தொழிலை மேம்படுத்த இலவச விதைகள் வினியோகம்

உடன்குடி வட்டார பகுதியில் பனைமர தொழிலை மேம்படுத்த இலவச விதைகள் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-09-15 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில் பனைமரத் தொழிலை மேம்படுத்த பனைமர விதைகள் இலவசமாக வழங்குவதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. உடன்குடி வட்டார பகுதியில் பனை மரத்தொழிலை மேம்படுத்தவும், விவசாய நிலங்களில் கடல் நீர் ஊடுருவாமல் இருக்கவும், விவசாய நிலங்களைசுற்றி மரங்களை அதிக அளவில் நெருக்கமாக வளர்ப்பதற்காகவும், வேளாண்மை துறை சார்பில் ஒரு விவசாயிக்கு 50 பனை மர விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களது பனைமரம் வளர்க்கும் நிலப் பட்டா நகல், ஆதார் கார்டு நகல், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கொண்டு சென்று உடன்குடி யூனியன் அலுவலகம் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் கொடுத்தால் ஒரு விவசாயிக்கு 50 பனை மர விதைகள் இலவசமாக வழங்கப்படும் என வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது,

--------

Tags:    

மேலும் செய்திகள்