போடியில்பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழா
போடியில் பரமசிவன் மலைக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
போடியில் பரமசிவன் மலைக்கோவில் உள்ளது. தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை சிவனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.