தைப்பூச விழாவில் மூலவருக்கு தங்க மூலாம் கவசம் பொருத்தப்பட்டு பூஜை

செய்யாறு பைங்கினர் கல்யாண முருகர் கோவிலில் தைப்பூச விழாவில் மூலவருக்கு தங்க மூலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-07 17:04 GMT

செய்யாறு பைங்கினர் கல்யாண முருகர் கோவிலில் தைப்பூச விழாவில் மூலவருக்கு தங்க மூலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பைங்கினா் அண்ணா நகரில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகர் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு செய்யாறு நகாில் உள்ள கோவில்களில் முதல் முறையாக மூலவருக்கு தங்க மூலாம் பூசப்பட்ட கவசம் மற்றும் கருவறையில் உள்ள ஆறுபடை வீடும், ரிஷப வாகனத்தில் மகேஸ்வரருக்கும் தங்க மூலாம் பூசப்பட்டு, சிறப்பு பரிகார ேஹாமம் மற்றும் பூஜை நடந்தது. நடைபெற்றது.

இதில் கோவில் அா்ச்சகா் சங்கா்ஜி, ரவி, சிங்காரம், அம்மையப்பன், விக்ரம், தமீம்அன்சாாி, கிருஷ்ணன், மோகன், லட்சுமணன் மற்றும் அண்ணாநகா் பொதுமக்கள் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்.

பக்தர்களுக்கு அன்னதானம்

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவிலில் வராகி அம்மன் உற்சவா் ஐம்பொன் சிலை பொருத்தும் பணி நடைபெற உள்ளது. மாதந்தோறும் பஞ்சமி நாட்களில் வராகி அம்மனுக்கு பரிகார பூஜையும், காா்த்திகை மாதத்தில் சஷ்டி பூஜையும், திருக்கல்யாண சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருவதாக கோவில் ஸ்தாபகரும், செய்யாறு நகர பா.ஜ.க. தலைவர் கே.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளாா்.

Tags:    

மேலும் செய்திகள்