கோவில்பட்டியில் மகளிர் ரேஷன்கடை கட்டிடத்துக்கு பூமி பூஜை
கோவில்பட்டியில் மகளிர் ரேஷன்கடை கட்டிடத்துக்கு பூமி பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஞ்சாயத்து சீனிவாச நகர் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் ரூ.11 லட்சம் செலவில் மகளிருக்கான ரேஷன்கடை கட்டிடம் கட்டும் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்துகொண்டு கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் சீனிவாசன், இனாம் மணியாச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.