கம்பம் பகுதியில்அங்கன்வாடி காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கம்பம் பகுதியில் அங்கன்வாடி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-01-29 18:45 GMT

கம்பம் பகுதியில் காலியாக உள்ள 51 அங்கன்வாடி பணியாளர், 54 உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தன. அதேநேரம் கம்பம் பகுதியை தவிர்த்து தேனி மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களில் காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆனால் கம்பம் பகுதியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, இந்நிலையில் காலி பணியிடங்களுக்கு மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்முகத்தேர்வும் நடந்தது. ஆனால் இதுவரை காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்