பேய்க்குளம் பகுதியில்புகையிலை பொருட்கள் விற்ற2 கடைக்காரர்கள் சிக்கினர்

பேய்க்குளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-19 18:45 GMT

தட்டார்மடம்:

பேய்க்குளம் பகுதியிலுள்ள 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றதாக இரண்டு கடைக்காரர்களை சாத்தான்குளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருடகள கடைகளில் பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் அப்பகுதியிலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அம்பலச்சேரியிலுள்ள கோயில்பிச்சை மகன் சின்னப்பா (வயது 38) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

2 கடைக்காரர்கள் கைது

அந்த கடையிலிருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்தனர்.

இதனையடுத்து பேய்க்குளம் பஜாரில் தேவராஜ் மகன் அருள்ராஜ்(52) என்பவரது குளிர்பான கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த கடையில் பதுக்கி வைத்து இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்ராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்