நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற தொண்டர்கள் பாடுபடவேண்டும்:அமைச்சர் கீதாஜீவன்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற தொண்டர்கள் பாடுபடவேண்டும என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-17 18:45 GMT

கோவில்பட்டி:

முகவர்கள் கூட்டம்

கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டமன்ற தொகுதி பாக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளரும், நகர சபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், சின்னப் பாண்டியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மகாலட்சுமி கே. சந்திரசேகர், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேச்சு

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,

கழக தலைவரும், முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி நடைபெறும் இந்த பாக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் சிறப்பு வாய்ந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் முகவர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற தொண்டர்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். அவரவர் பகுதியில் உள்ளவர்கள் உள்ளூரில் இருக்கிறார்களா?, வெளியூரில் இருக்கிறார்களா? என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். வாக்காளர் முகவரி மாற்றம் இவற்றை முறையாக பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்களுடன் தினமும் தொடர்பு கொண்டு அவர்கள் பிரச்சனைகளை கேட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையாக தெரிவித்து தீர்வு காண வேண்டும். தி.மு.க.வெற்றி பெறுவதற்கான பணியை இன்றே தொண்டர்கள் தொடங்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நகர-ஒன்றிய நிர்வாகிகளிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள், என்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்