கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளை பாதுகாக்கக்கோரி மனு
விவசாயிகளை பாதுகாக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோபாலபுரம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், "எங்கள் ஊரில் விவசாய நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் நபரால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.