உடன்குடி பகுதியில் ரூ.31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

உடன்குடி பகுதியில் ரூ.31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-10-30 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பகுதியில் ரூ.31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா

உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்புலிங்கபுரத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.10 லட்சம் மதிப்பில் யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டிடமும், ஆதியாக்குறிச்சி ஊராட்சி தீதத்தாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 19.91 லட்சம் மதிப்பில் ஊராட்சிஅலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிதலைவர் பாலசரஸ்வதி முன்னிலை வகித்தார்.

கனிமொழி எம்.பி.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதில் மாநில தி.மு.க., மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பேருராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆறுமுகநேரி

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மாநில கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.இந்த அணிவீரர்களை பள்ளி தாளாளர் வாவு மஸ்ணவி, தலைமை ஆசிரியர் செய்யது அப்துல் காதர், உடற்பயிற்சி ஆசிரியர் மிக்ஸர் பர்ணான்டோ ஆகியோர் பாராட்டினர். இதேபோல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் எல். கே.மேல்நிலைப் பள்ளி அணி் வெற்றி பெற்று தருமபுரியில் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற வீரர்களை பள்ளி தாளாளர் டாக்டர் முகமது லெப்பை, பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரப், தலைமை ஆசிரியர் செய்யது அகமது, உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜமால், இஸ்மாயில் ஆகியோர் பாராட்டினர்.

கனிமொழி எம்.பி.-அமைச்சர் பாராட்டு

வெற்றி பெற்ற இரு அணிகள் வீரர்களையும் நேற்று முன் தினம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம். பி. மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்