கானாடுகாத்தான் பேரூராட்சியில் 8-வது வார்டு இடைத்தேர்தல் ரத்து

கானாடுகாத்தான் பேரூராட்சியில் 8-வது வார்டு இடைத்தேர்தல் ரத்து

Update: 2022-06-29 18:15 GMT

காரைக்குடி

யாரும் போட்டியிட முன் வராததால் கானாடுகாத்தான் பேரூராட்சியில் 8-வது வார்டு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

8-வது வார்டு இடைத்தேர்தல்

சிவகங்ைக மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது 8-வது வார்டு ஆதிதிராவிடர் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த வார்டில் ஒருவர் கூட ஒதுக்கீட்டுக்கான வேட்பாளர் இல்லாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இருந்தபோதிலும் அருகே உள்ள வார்டை சேர்ந்த ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு அவரும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தேர்தல் நடைபெறவில்லை. 8-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாகவே இருந்தது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு வருகிற 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதனையொட்டி கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8-வது வார்டுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்து. ஆனால் அப்பகுதி மக்கள் இனசுழற்சி முறையிலான ஒதுக்கீட்டை மாற்றாவிட்டால் இம்முறையும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வார்டில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ரத்தாகும்...

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று பக்கத்து வார்டை சேர்ந்த பூபதி என்ற பெண் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவில் 8-வது வார்டை சேர்ந்த உலகநாதன் என்பவர் முன்மொழிவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது ஆனால் உலகநாதன் அதனை மறுத்தார். இதைதொடர்ந்து பூபதி, உலகநாதன் இருவரையும் தேர்தல் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். உலகநாதன் விசாரணைக்கு ஆஜரானார். பூபதி ஆஜராகவில்லை. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதனால இம்முறையும் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டுக்கான தேர்தல் ரத்தாகும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்