பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2023-09-28 19:48 GMT

நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியது. சி.பி.சி.ஐ.டி. போலீசார், பல்வீர்சிங் மீது வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர். இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதற்கான பணியில் நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்