சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.460-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.460-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.332-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டு பூ ரூ.110-க்கும், கனகாம்பரம் ரூ.460-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம்போனது.