மந்தித்தோப்பில் மின்னொளி கபடி போட்டி
மந்தித்தோப்பில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள மந்தித்தோப்பு ராஜகோபால் நகர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன. போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, போட்டிக்கான பரிசுத் தொகையை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.