கெங்கநல்லூர் ஊராட்சியில் அதிகாரி இன்றி கிராமசபை கூட்டம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

கெங்கநல்லூர் ஊராட்சியில் அதிகாரி இன்றி கிராமசபை கூட்டம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-14 18:43 GMT

கெங்கநல்லூர் ஊராட்சியில் அதிகாரி இன்றி கிராமசபை கூட்டம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு ஒன்றியம் கெங்கநல்லூர் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தின் சிறப்பு அதிகாரியாக தோட்டக்கலை துறை அதிகாரி மாலினி நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் அதிகாரி இல்லாமல் எப்படி கூட்டத்தை நடத்தலாம் என ஊராட்சி மன்ற தலைவரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இதுகுறித்து அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அதிகாரி சுதாகரிடம் மனு கொடுத்தனர். அதில் அதிகாரியே வராமல் நடந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு தேதியில் கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறியிருந்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி விசாரணை செய்வதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்