கனியாமூர் கலவரத்தில் போலீசார் மீது கற்களை வீசிய வாலிபர் கைது

கனியாமூர் கலவரத்தில் போலீசார் மீது கற்களை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-09-08 15:41 GMT

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கனியாமூர் பள்ளி கலவரத்தில் போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா முல்லைவாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் (வயது 20) என்பவரை வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்