கனியாமூர் கலவரத்தில் பள்ளியை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது
கனியாமூர் கலவரத்தில் பள்ளியை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்த கலவரத்தில் பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பஸ்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கலவரத்தில் பள்ளியை சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் அருண் (வயது 24), மணி மகன் எழிலரசன் (20), போலீஸ் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட சின்னசேலம் தாலுகா தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் மோகன் (30), பங்காரம் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் முத்துலிங்கம் (37) ஆகிய 4 பேரை வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.