கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடி பணி தீவிரம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடி பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2023-06-02 18:45 GMT

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்த பகுதியில் முதல்போக சாகுடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது.

இதையடுத்து முதல் போக சாகுபடிக்காக நேற்று முன்தினம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல்போக சாகுபடிக்காக நிலத்தை தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நிலத்தை டிராக்டர்கள் மூலம் உழுது தயார்படுத்தி வருகின்றனர். முதல்போக சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்கினால் நல்ல மகசூல் பெறலாம் என்று அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்