அந்தியூர் அருகே ஈஸ்வரன் கோவிலில்சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
அந்தியூர் அருகே ஈஸ்வரன் கோவிலில் சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அந்தியூர் அருகே அத்தாணி கிராமம் திருவள்ளுவர் நகர் ஓடைமேடு பகுதியில் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் கோவில் உள்ளது. இங்குள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு 8-வது ஆண்டாக நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.