புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-31 18:45 GMT

புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதுமைப்பெண் திட்டம்

அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு, தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டில் படிக்கும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித் தொகை பெற்று உள்ளனர். தற்போது முதலாமாண்டு படிக்கும் மாணவிகளும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் இன்று (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை https://www.puthumaipenn.tn.gov.in என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள் ஆவர். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆகையால் மாணவிகள் தவறாமல் தங்களுடைய ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோன்று 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதல் கட்டமாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எனவே தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையை சரியாக தெரிந்து கொண்டு கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்