பர்கூர் மலைக்கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
பர்கூர் மலைக்கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ள பசுமைப்பள்ளிக்கூட வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சிறப்பு அலுவலர் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, 'குழந்தை திருமணம் என்பது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமணங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 1098 என்ற எண்ணில் கட்டணமில்லாமல் தொடர்பு கொள்ளலாம். இதனை தடுத்திட குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து செயலாற்றிட வேண்டும்' என்றார்.
இதனைத் தொடர்ந்து, அரசமைப்பு உரிமைக்கல்வி திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, வக்கீல் கிருஷ்ணகுமார், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ் மற்றும் பர்கூர், தாமரைக்கரை, சோளக்கணை, துருசனாபாளையம் மன்ற குழந்தைகள் கலந்து கொண்டனர்.