பர்கூர் ஒசூர் மலைகிராமத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 விவசாயிகள் கைது

கஞ்சா செடி

Update: 2022-09-28 19:30 GMT

பர்கூர் ஒசூர் மலைகிராமத்தில் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஓசூர் மலை கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது சோளப்பயிர் தோட்டத்தில் 6 கஞ்சா செடி வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கஞ்சா செடி வளர்த்ததாக தோட்டத்து உரிமையாளரான விவசாயி மாதேவன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தோட்டத்தில் 6 கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மற்றொருவர் சிக்கினார்

இதேபோல அதே பகுதியை சேர்ந்த விவசாயியான கெஞ்சமரி (29) என்பவரும் தனது தோட்டத்தில் சோளப்பயிருக்கு இடையே ஒரு கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கெஞ்சமரியை போலீசார் கைது செய்தனர். மேலும் தோட்டத்தில் இருந்த கஞ்சா செடியையும் அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்