மன்னார் வளைகுடா தீவுகளில் கடலோர போலீசார் சோதனை

மன்னார் வளைகுடா தீவுகளில் கடலோர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-23 18:45 GMT

சாயல்குடி, 

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கடலோர காவல் நிலையத்திற்கு உட்பட்ட உப்புத்தண்ணி தீவு, நல்ல தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு ஆகிய தீவுகளில் தமிழக கடலோர போலீசார், வனத்துறையுடன் இணைந்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தீவுகளில் பதுங்கி உள்ளார்களா? கடத்தல் பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

இதே போல் கீழக்கரை கடலோர காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாலிமுனை, ஆணைபார் தீவு பகுதிகளிலும் தமிழக கடலோர போலீசார், வனத்துறையுடன் இணைந்து தீவிரமாக சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்