கப்பியறையில் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

கப்பியறையில் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-05-07 21:13 GMT

கப்பியறையில்

5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

கருங்கல்,

கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட புதுகாடுவெட்டி பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகளுக்கு மிக அருகில் செயல்பட்டு வருவதால் இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கப்பியறை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறி காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் கல்குவாரிக்கு அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி கடந்த 3-ந் தேதி முதல் கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அலுவலக வளாகத்திலேயே உண்டு, உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலும் அலுவலக வளாகத்தில் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், காங்கிரஸ், பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு அனைத்து கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்