சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்தலைமறைவாக இருந்த சிறுவன் போக்ேசாவில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுவன் போக்ேசாவில் கைது

Update: 2023-03-16 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அக்காள், தங்கை இருவரும் அய்யர்பாடி எஸ்டேட் ரோப்வே பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களுக்கு தொல்லை கொடுத்து தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வால்பாறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கோவை-செல்வபுரம் பகுதியில் வைத்து வால்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்