கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கே.தெக்கூரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 42). இவரை கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்தது. இது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்களில் தெக்கூரை சேர்ந்த சிவா (24), சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அர்ஜூனன் (28), அஜித்பாண்டியன் (23), புளியங்குளத்தை சேர்ந்த மதியழகன் (23) ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.