குளியலறையில்வடமாநில தொழிலாளி தவறி விழுந்து சாவு
தூத்துக்குடியில் குளியலறையில் வடமாநில தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார்.
உத்தரபிரதேசம் மாநிலம் தோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் மோனுகுமார் (வயது 28). இவர் தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரில் தங்கி இருந்து, என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் குளியலறையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த மோனுகுமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.