மீளவட்டான் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

மீளவட்டான் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-27 18:45 GMT

மீளவிட்டான்:

தூத்துக்குடி புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் கதிர்வேல்நகர் பகுதியில், மீளவிட்டானில் இருந்து துறைமுகம் நோக்கி செல்லும் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்