கோவில்களில் ஆடிமாத கூழ் வழிபாடு

உடன்குடி கோவில்களில் ஆடிமாத கூழ் வழிபாடு நடந்தது.

Update: 2023-07-26 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில், முத்து கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களிலும் ஆடி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு ஆடி மாத கூழ் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் ெசய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்