தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டிய வெயில்
தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று வெப்பத்தின் அளவு சற்று குறைந்திருந்தது. இருப்பினும் 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அந்த இடங்களின் விவரம் வருமாறு:-
திருப்பத்தூர் - 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்)
ஈரோடு - 104 டிகிரி (40 செல்சியஸ்)
சேலம் - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
கரூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
நாமக்கல் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
மதுரை - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
வேலூர் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
தர்மபுரி - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)