தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் நேற்றும் நேற்று முன் தினமும் வெயில் வறுத்தெடுத்தது. நேற்று பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.
இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகீர் தகவலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள். இந்தநிலையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.