தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2023-01-11 18:45 GMT

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கி, கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

வங்கியின் பெண் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வண்ண கோலங்கள் வரைந்து பொங்கலிட்டனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்ற தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவை நடந்தன.

விழாவில் வங்கி பொது மேலாளர்கள், துணை பொதுமேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், 'வங்கியின் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வங்கியும், வங்கி ஊழியர்களும், அவர்களின் குடும்பமும் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும். வங்கி ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்