ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில்கருடன்களுக்கு சிறப்பு வழிபாடு

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் கருடன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-07-26 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் கருடன் திரு நட்சத்திரம் நேற்று கொண்டாடப்பட்டது. மகா விஷ்ணுவின் வாகனமான கருட பகவான் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம், தொடர்ந்து சன்னதி கருடனுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை நடந்தது. தொடர்ந்து இருமாடவீதிகளிலும் மதில்கள் மேல் உள்ள கருட பகவானுக்கு காலை 10 மணிக்கு பால், பஞ்சாமிர்தம் அபிஷேகமும் தொடர்ந்து கும்பம் வைத்து திருமஞ்சனம் நடந்தது. பகல் 12 மணிக்கு புது வஸ்திரங்களை அணிவித்து மாலைகள் அலங்காரம் செய்து தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் திருவேங்கடத்தான், சீனிவாசன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித் ஆய்வாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்